பெண் பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிகாரம்: பிரதமர் வலியுறுத்தல்
பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் பஞ்சாயத்து தலைவர்களின் கணவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி பஞ்சாயத்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களும் இடம்பெற வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு வாய்ப்பும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
பஞ்சாயத்துகளின் பெண் தலைவர்களை செயல்படவிடாமல் தடுத்து, அவர்களுடைய கணவர்கள் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மோடி கூறினார். பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களுடைய கிராமங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்கு, உறுதியான திட்டங்களுடன் சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கிராமங்களில் அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும் எனக் கூறிய மோடி அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் கிராமத்தில் பள்ளிச் சிறார்களுடன் வாரத்தில் ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply