உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 132 ஆவது இடம்
இந்த ஆண்டிற்கான உலகின் மிகவும் மகி ழ்ச்சிகரமான நாடுகள் வரிசையில் இலங்கை 132 ஆவது இடத்திலுள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் இயலக்கூடிய அபிவிருத்தி இலக்குகளை எட்டும் முகமாக ஸ்தாபிக்கப்பட்ட இயலக்கூடிய அபிவிருத்தி தீர்வுகள் வலைப்பின்னலால் 158 நாடுகளை உள்ளடக்கி இந்த ஆய்வு நடத்தப்பட் டது. மேற்படி ஆய்வில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சுவிட்ஸர்லாந்து முதலிடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சுவிட்ஸர்லாந்திற்கு அடுத்ததாக மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் முறையே ஐஸ்லாந்து, டென்மார்க், நோர்வே, கனடா ஆகிய நாடுகள் உள்ளன.
மகிழ்ச்சி குறைந்த நாடுகள் வரிசையில் முறையே டோகா, புருண்டி சிரியா, பெனின் மற்றும் ருவண்டா ஆகிய நாடுகள் உள்ளன.இந்த ஆய்வானது அரசாங்க கொள்கை களில் செல்வாக்கைப் பிரயோகிப்பதை நோக்காகக் கொண்டது.
மூலதன அடிப்படையில் உண்மையான உள்நாட்டு உற்பத்தியின் அளவு, எதிர்பார்க் கப்படும் ஆரோக்கியமான வாழ்க்கை, ஊழல் மட்டங்கள் மற்றும் சமூக சுதந்திரங் கள் போன்ற அம்சங்களைக் கவனத்திற் கொண்டு இந்த ஆய்வுக்கான முடிவுகள் தீர் மானிக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply