அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பார்வையாளர்கள் வெளியேற்றம்
அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் லிபர்டி தீவில் சுதந்திரதேவி சிலை உள்ளது. அது 151 அடி (93 மீட்டர்) உயரம் கொண்டது. சுற்றுலா தளமாக விளங்கும் இந்த சிலையை பார்வையிட தினசரி ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மர்ம டெலிபோன் கால் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் சுதந்திரதேவி சிலையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்தான்.இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். நியூயார்க் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையிட்டனர்.
போலீஸ் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறதா? என மோப்பம் பிடித்தன.
வெடிகுண்டு மிரட்டல் வந்த போது சுதந்திரதேவி சிலையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கடுமையான சோதனைகளுக்கு பிறகு அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் சுதந்திரதேவி சிலைக்கு செல்ல பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply