19இல் ஜனநாயகம், சுதந்திரம் நல்லாட்சிக்கான அம்சங்கள் : இரா. சம்பந்தன்

அரசியலமை ப்பின் 19ஆவது திருத்­த­மா­னது நிறை­வேற்று அதி­காரம் எனும் இராட்­சத சக்­தியை இல்­லா­தொ­ழித்து, ஜன­நா­யகம், சுதந்­திரம் உள்­ளிட்ட நல்­லாட்­சிக்­கான உறு­திப்­பாட்டு அம்­சங்­களை உள்­ள­டக்­கி­யி­ருப்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்கட்­ கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன ­வினால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட 19வது திருத்தம் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார்.

சம்­பந்தன் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

நிறை­வேற்று அதி­கார முறை­மை­யி­னூ­டாக நாட்டு மக்கள் தங்­க­ளது சுதந்­தி­ரத்தை மட்­டு­மல்­லாது இறை­மை­யையும் கூட இழந்து காணப்­பட்­டனர்.மக்கள் தமது விருப்பின் பேரில் உறுப்­பி­னர்­களைத் தெரிந்து அவர்­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்பி வைப்­பது அவர்­க­ளுக்­கு­ரிய உரி­மை­யாகும்.

இருந்த போதிலும் இன்­றைய நிலையில் ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அபரி மித­மான அதி­கா­ரத்­தி­னூ­டாக பாரா­ளு­மன்­றத்தை ஒரு வருட காலத்­துக்குள் கலைத்து விடு­வ­தற்கும் இய­லுமை காணப்­ப­டு­கின்­றது. இதன் கார­ணத்தால் நாட்டு மக்­களின் இறை­மையும் வாக்­கா­ளர்­களின் உரி­மையும் மீறப்­ப­டு­கின்­றது.

இருப்­பினும் 19வது திருத்­தத்தின் ஊடாக ஜனா­தி­ப­திக்கு இருந்து வரு­கின்ற மேற்­படி அதி­காரம் நீக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் சுதந்­திரம் ஜன­நா­யகம் மற்றும் நல்­லாட்சி ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்தும் அம்­சங்கள் உள்­வாங்­கப்­ப­டு­கின்­றன. 19வது திருத்­தத்தின் ஊடான மேற்­படி விட­யங்கள் வர­வேற்கக் கூடி­ய­வை­யாகும். அது மாத்­தி­ர­மின்றி 19 வது திருத்­தத்­தினை நிறை­வே­று­வதன் மூலம் பாரா­ளு­மன்­றத்தின் கெள­ரவம் பாரம்­ப­ரி­யமும் பாது­காக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் அர­சி­ய­லமைப்பு பேரவை மீளு­ரு­வாக்கம் பெறு­கின்­றது. நீதி­ய­ர­சர்கள் அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையின் சிபா­ரிசின் பிர­கா­ரமே ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­படும் நிலைமை உரு­வாக்­கப்­ப­டு­கி­றது இது சிறந்த விட­ய­மாகும்.

கடந்த காலங்­களில் நீதித்­து­றையின் மீது மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்தே காணப்­பட்­டனர். ஆனாலும் இத் திருத்தம் நிறை­வேற்­றப்­ப­டு­வதன் மூலம் நீதித்­து­றையில் சுயா­தீன நிய­ம­னங்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. இதனால் நாட்டு மக்­க­ளுக்கும் நம்­பிக்கை பிறக்கும்.

இது இவ்­வா­றி­ருக்க சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வாறு நிய­மிக்­கப்­ப­டு­கின்ற சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் சுயா­தீ­ன­மாக செயற்­பட வேண்டும் என்­ப­துடன் அத­னூ­டாக மக்­களின் உரி­மை­களும் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும்.

முன்­னைய கால கட்­டங்­களின் போது மேற்­படி ஆணைக்­குழு நிறு­வ­னங்­களின் செயற்­பா­டு­களில் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டி­ருந்த நிலைமை காணப்­பட்­டது. ஆனாலும் 19இல் அது இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டு­கின்­றது.

இன்று ஜனா­தி­ப­தி­யாக இருப்­பவர் மீண்டும் பத­விக்கு வர­வேண்டும் என்ற ஆசையைக் கொண்­டி­ரா­த­வ­ராக இருக்­கின்றார். அது மாத்­தி­ர­மின்றி தனக்­குள்ள அதி­கா­ரங்­களை குறைப்­ப­தற்கும் அவற்­றைப்­ப­கிர்­வ­தற்கும் தயா­ராக உள்­ள­வ­ரா­கவும் இன்­றைய ஜனா­தி­பதி திகழ்ந்து வரு­கிறார். இத்­த­கைய ஆரோக்­கிய நிலை­மையை பாராட்­டி­யாக வேண்டும்.
ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அதி­கா­ர­மா­னது இராட்சத அதி­கா­ர­மாக இருக்க முடி­யாது. அவ்­வாறு அது உரு­வெ­டுக்­கா­த­வாறு நாம் பார்க்க வேண்­டி­யுள்­ளது. அவ்­வா­றான அதி­கா­ரத்­துக்கு இட­ம­ளிக்கும் பட்­சத்தில் அது சர்­வ­தி­கா­ரத்­துக்கு வழி­வ­குத்­து­விடும். 18வது திருத்­தத்தின் மூலம் இதற்­கான வழி­வகை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தமை கவ­லை­மிக்க விட­ய­மா­கவே அமைந்­துள்­ளது.

ஒருவர் இரு தட­வை­க­ளுக்கு மேல் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகுக்க முடி­யாது என்­பது உலகின் பல நாடு­களில் சட்­ட­மாக இருந்து வரு­கி­றது. அவ்­வாறே இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் இருந்த சரத்தும் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதன்­மூலம் இங்கு ஒருவர் எத்­தனை தடவை வேண்­டு­மா­னாலும் ஜனா­தி­ப­தி­யாக வர­மு­டியும் என்­ற­வாறு மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யா­னது நாட்டை சர்­வ­தி­கா­ரத்­துக்குள் இட்டுச் செல்லும் விட­ய­மாகும்.

இப்­ப­டி­யான நிலையில் தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிப்பதற்கென கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வாக்களித்ததன் மூலம் வெற்றிபெறவும் செய்தனர்.

அது மாத்திரமின்றி இந்நாடானது சர்வதிகாரத்துக்குள் இட்டுச் செல்லப்பட்டு விடக்கூடாது என்பதிலும் மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளனர். இதன் அடிப்படையில் தான் 19வது திருத்தம் இங்கு வந்துள்ளது.இவ்வாறான திருத்தம் இந்த சபையில் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் சுதந்திரம் அதனூடான நல்லாட்சி என்பன பாதுகாக்கப்படுகின்றன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply