நேபாளத்திற்கு 1,75,000 டாலர் மதிப்பிலான மருந்துகள் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு 4 ஆயிரம் பேர் பலியாயினர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவ உலக சுகாதார நிறுவனம் 1,75,000 டாலர் மதிப்பிலான மருந்துகள், மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான கருவிகளை கொடுத்து உதவியுள்ளது. நிலநடுக்கம் நடந்த அடுத்த மூன்று மணி நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் 40, ஆயிரம் மக்களுக்கு 3 மாதத்துக்கு தேவையான மருந்துகளை அனுப்பிவைத்தது.

இதுகுறித்த தகவலை உலக சுகாதார நிறுவனத்தின்  தென் கிழக்கு ஆசியா மண்டல இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply