காத்மாண்டுவிலிருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றம்
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் அத்யாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில், நாடுகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் கிடைப்பது அரிதாகியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
நிலநடுக்கத்தால் காத்மாண்டுவில் உள்ள மின் நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், காத்மாண்டு நகரின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின. காத்மாண்டுவிலிருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிவருகின்றனர்.
குறிப்பாக காத்மாண்டுக்கு வேலை தேடி வந்தவர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். அரிதாக செல்லும் வாகனங்களில் ஏற பொதுமக்கள் முண்டியடிக்கும் சூழல் நிலவுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply