மே தினத்தை கொண்டாடும் உரிமை சு.கவிற்கே உண்டு : எதிர்க் கட்சித் தலைவர் நிமல்

நாட்டில் தொழிலாளர் தினத்தை நினைவுகூர எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இல்லாத பூரண உரிமை ஸ்ரீல. சு. கட்சிக்கு உண்டு. அந்த உரிமையை எவருக்கும் எந்த நாளிலும் பறித்துக்கொள்ள முடியாது. எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்துள்ள மே தினச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். ஸ்ரீல. சு. கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது ஜன ஐக்கிய முன்னணியில் சகல அரசாங்கங்களும் நாட்டில் உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரும் பணியாற்றி உள்ளன.

இத்தகைய வரலாறு ஐ. தே. க.வுக்கு இல்லை. ஒரு நாளுக்கு 10 ரூபா சம்பள அதிகரிப்பு கேட்டதால் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் அரச சேவையில் இருந்து விரட்டப்பட்டனர்.

உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எம்மால் மறக்க முடியாதது. 30 வருட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து தாய்நாட்டை ஒளிமயமாக்க உழைக்கும் மக்களின் சக்தி அவசியமாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply