பிரேமதாஸவின் 22 ஆவது சிரார்த்த தினம் இன்று

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 22வது சிரார்த்த தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு பல சமய அனுஷ்டானங்கள் இடம்பெறவுள்ளன. கொழும்பு அளுத்கடை வீதியில் நிர்மாணிக்கப் பட்டுள்ள பிரேமதாஸ சிலைக்கு அருகாமையில் இரங்கல் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் இதில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் வறுமையை ஒழிக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி திட்டத்தினையும் வலுவூட்டும் நோக்கத்தோடு இம்முறை இந்த சிரார்த்த தினம் கொண்டாடப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply