நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகளிடமிருந்து மேலும் 160 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு
போகோ ஹராம் தீவிரவாதிகளிடமிருந்து மேலும் 160 பெண்கள் மற்றும் குழந்தைகளை நைஜீரியா ராணுவம் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சாம்பிசா வனப்பகுதியில் போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின் போது முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெவ்வேறு வயதைவுடைய 100 சிறுவர், சிறுமிகள் மற்றும் 60 பெண்களை ராணுவம் மீட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 3 முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 300 சிறுமிகள் மற்றும் பெண்களை ராணுவம் மீட்டது. இவர்களில் 200 சிறுமிகளும் 93 பெண்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்டவர்களில் யாறும், கடந்த ஏப்ரலில் சிபோக் என்ற நகரின் கிறிஸ்தவ உண்டு உறைவிட பள்ளியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட, 219 சிறுமியர் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே கடத்தி செல்லப்பட்ட சிறுமிகளின் நிலை பற்றி தெரியவில்லை. அவர்கள் இன்னும் பயங்கரவாதிகள் பிடியில் தான் உள்ளதாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply