அணு மின்சார உற்பத்தியில் 13வது இடத்தில் இந்தியா
அணு மின்சார உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 13வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அணுமின்சார சக்தி அமைப்பு வெளியிட்டுள்ள 2014-ம் ஆண்டுக்கான Power Reactor Information System தகவலின்படி அணுமின்சார உற்பத்தியில் இந்தியாவுக்கு 13-வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல், உலக அளவில் அணுஉலைகள் எண்ணிக்கை அடிப்படையில் 7-வது இடத்தில் இந்தியா உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டிற்குள் அணுசக்தி மின்சார உற்பத்தியை 5,780 மெகா வாட்டில் இருந்து 10,080 மெகா வாட்டாக அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. எதிர்காலத்தில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் அணு மின்சாரத்திற்கான திட்டங்களும், வெளிநாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அணுமின் திட்டங்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply