பாகிஸ்தானின் முதல் சூரிய மின் திட்டம் தொடக்கம்
சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானின் முதல் சூரிய மின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மின்திட்ட தொடக்கவிழாவில் பேசிய பிரதமர் நவாஸ் ஷெரீப், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நாட்டின் மின் தேவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்தீபியான் எலக்ட்ரிக் அப்பாரட்டஸ் என்ற சீன நிறுவனம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூரில் சூரிய ஒளி மின் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. 100 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இந்த மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் தொடங்கி வைத்தார்.
காயித் ஈ ஆசாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மின் உற்பத்தி நிலையம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின் திட்டம் தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
சீன அதிபர் ஜிஜின்பிங் கடந்த மாத இறுதியில் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அப்போது, எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் பாகிஸ்தானில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply