உள்நாட்டு போரில் மாயமான தமிழர்கள் பற்றி விசாரிக்க குழுக்கள் அமைப்பு: இலங்கை அரசு ஏற்பாடு

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 27 ஆண்டுகள் உள்நாட்டு போர் நடந்தது. அப்போர் கடந்த 2009–ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மாயமாகினர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. அவர்களை கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி மாயமான தமிழர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடும் தவிப்பில் உள்ளனர்.அது குறித்து விசாரிக்க கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே ஒரு கமிஷனை அமைத்தார். அதற்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மேஸ்வெல் பராக்ரம பரனகமா தலைவராக இருந்தார்.மேலும் 3 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். அக்குழு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது.இதற்கிடையே சமீபத்தில் அமெரிக்கா வெளியுறவு மந்திரி ஜான்கெர்ரி இலங்கை சென்றிருந்தார். அப்போது போரின் போது மாயமான தமிழர்கள் பற்றியும், ஐ.நா. சபை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் இலங்கை அரசிடம் வலியுறுத்தினார்.இந்த நிலையில் மாயமான தமிழர்கள் குறித்து விசாரிக்க 4 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இக்குழுக்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவியில் இருக்கும் மூத்த அதிகாரி தலைமையில் இயங்கும். அதில் சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி பேசும் தலா ஒரு அதிகாரிகள் என மொத்தம் 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.இந்த 4 குழுக்களுக்கும் சுதந்திரமாக யாருடைய தலையீடு இன்றி இயங்கும். இந்த குழுக்கள் கமிஷன் புதிய செயலாளர் எச்.டபிள்யூ குணதாசா மேற்பார்வையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான்கெர்ரி வலியுறுத்தலின் பேரில் இந்த விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என குணதாசாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் 2 வாரத்துக்கு முன்பு விசாரணை குழுக்கள் அமைத்து அதிபர் சிறிசேனா ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாரத்துக்கு முன்பு பொது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சக செயலாளருடன் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply