குட்டி இளவரசி பிறந்தபின் மீண்டும் வேலைக்கு செல்லும் இங்கிலாந்து இளவரசர்

தனது இரண்டாவது குழந்தையும் குட்டி இளவரசியுமான சார்லட் பிறப்பதற்காக 6 வாரம் விடுப்பு எடுத்திருந்த இங்கிலாந்து இளவரசர் இன்று முதல் தனது ஏர் ஆம்புலன்ஸ் பைலட் பணிக்கு திரும்ப உள்ளார். மே 2-ம் தேதி இந்த பூமிக்கு வந்து, இங்கிலாந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது குட்டி இளவரசி சார்லட்டின் பிறப்புக்காக ஏப்ரல் மாதம் முதலே விடுப்பு எடுத்திருந்த சார்லஸ், தனது மனைவி கேத் மிடில்டன், குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் புது வரவான இளவரசி சார்லட்டுடன் நோர்போக் கவுண்டியில் உள்ள சண்ட்ரிங்கம் எஸ்டேட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகியுள்ளதால், ஏர் ஆம்புலன்ஸ் பைலட் பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் சார்லஸ் மீண்டும் தனது பணிக்கு திரும்பியுள்ளார். பயிற்சி முடிந்ததும் அவசர காலத்தில் நோயாளிகளை விமானம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியை அவர் மேற்கொள்வார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply