அமெரிக்காவின் கொலராடோவைத் தாக்கிய சூறாவளி
அமெரிக்காவின் கொலராடோவைத் தாக்கிய சூறாவளியை வானியல் ஆராய்ச்சியாளர்கள் படம் பிடித்து வெளியிட்டனர். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவை அயிரக்கணக்கான சூறாவளிகள் தாக்கி வருகின்றன. அவற்றில் ஒரு சில சூறாவளிகள் பெரிய அளவிலான இழப்புக்களை ஏற்படுத்துகின்றன. கொலராடோவை அண்மையில் தாக்கிய சூறாவளியை வானியல் ஆராய்ச்சியாளர்கள் சிலர் வாகனங்களில் சென்று படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். தொலைவில் தெரியும் சூறாவளிக் காற்றினால் அடித்துவரப்படும் தூசுமண்டலம் புகை போல் தெரிவது இக்காட்சிகளில் பதிவாகியுள்ளது. புவியின் தெற்குப் பகுதியில் வலது புறமும், வட பகுதிகளில் இடபுறமும் வழக்கமாகச் சுழலும் தன்மை கொண்டாலும், தற்போது தாக்கிய சூறாவளி வலது புறம் சுழன்று வந்தது ஆச்சரியமளிப்பதாக வானியல் ஆராய்ச்சியாளர் Travis Cruz தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply