உக்ரைனில் தீவிபத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் எரிந்து நாசம்

உக்ரைனின் கிய்வ் நகருக்கு அருகே பற்றிய தீயால் பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்று முழுமையாக எரிந்து நாசமானது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட மூன்று வீரர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை. உக்ரைன் தலைநகர் கிய்விலிருந்து சுமார் 19 மைல் தொலைவில் உள்ள வசில்கிவ் என்ற இடத்தில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று திடீரெனத் தீ பற்றியது. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த 16 எண்ணெய் டேங்குகளும் இத்தீயால் முழுமையாக எரிந்து நாசமாகின. இதனல் அப்பகுதி முழுவதும் கரும்புகை வெளியேறியது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உடனடி நடவடிக்கை காரணமாக தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் அருகில் இருந்த மற்றொரு பெட்ரோல் விற்பனை நிலையம் பாதுகாக்கப்பட்டது. அருகில் இருந்த ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டன.

இருப்பினும், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் படுகாயமடைந்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தீ பற்றிய இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் பெரிய அளவிலான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டன. தீயை அணைக்கும் பணியில் 62 தீயணைப்பு வாகனங்களும், அவற்றிற்கு தண்ணீர் அளிப்பதற்காக மூன்று ரயில்களும் ஈடுபட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply