மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்
மியான்மர் நாட்டுக்குள் ஒளிந்து கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் மீது கொடூர தாக்குதல்களை நடத்திவரும் தீவிரவாதிகளை, அந்நாட்டுக்குள் சென்று இந்திய ராணுவத்தின் கமாண்டோ படையினர் வேட்டையாடினர். மணிப்பூர் மாநில எல்லையை ஒட்டியுள்ள மியான்மர் நாட்டுப்பகுதியில் இரண்டு முகாம்கள் அமைத்து தங்கியிருந்த தீவிரவாதிகள் கடந்த சில வாரங்களில் 30-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து இத்தீவிரவாதிகளின் கதையை முடிக்க திட்டமிட்ட இந்திய ராணுவம் நேற்று அதிகாலை 3 மணிக்கே கமாண்டோ படை வீரர்களை அனுப்பியது. அவர்களுக்கு உதவியாக வான்வழியாக ஆளில்லா விமானங்களும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும் செயல்பட்டன. எனினும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் தகவலை மியான்மருக்கான இந்திய தூதரகம் நேற்று காலை வழக்கமான அலுவலக நேரத்தில் தான், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தெரிவித்தது.
இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங், இந்த அதிரடி தாக்குதலை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார் என்றார். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு அண்டை நாடுகள் இடமளித்தால், இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று மோடி கூறியதாகவும் சிங் மேலும் தெரிவித்தார்.
ஏறத்தாழ 13 மணி நேரம் நடைபெற்ற இத்தாக்குதலில், தீவிரவாதிகளின் இரு முகாம்களும் அழிக்கப்பட்டதுடன், 20 முதல் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி முடித்த கமாண்டோ படையினர், மீண்டும் இந்திய பகுதிக்குள் திரும்பி வந்தனர். நீண்ட காலத்துக்கு பின் முதன் முறையாக எல்லை தாண்டி சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply