எதிர்காலத்தில் அரசியலுக்குள் வரமாட்டேன்

அரசியலுக்கு வரமாட்டேன் என்று பாதுகாப்பு அமைச் சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பாதுக்க உடமுல்ல கல்லேன் விகா ரையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர் களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புலனாய்வாளர்கள் தனக்கு அறிக்கையிடுவதில்லை என்பதனால் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் தன்னால் எதுவும் கூறமுடியாது. தன்னுடைய காலத்தில் முன்னெடுக் கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நான் இருந்தபோது நாட்டில் நல்ல பாதுகாப்பு நிலையமையொன்று ஏற்ப டுத்தி விட்டுத் தான் அதிலிருந்து விலகினேன்.

யுத்தத்தை நிறைவுசெய்தது மட்டுமன்றி. அதற்கு பின்னர் ஐந்து வருடங்களுக்கு நல்லதொரு பாதுகாப்பு நிலைமையை ஏற்படுத்தினேன்.

எல்லா மக்களும் சகல மாகாணங்களுக்கும் சென்று வரக்கூடிய நிலைமையை ஏற்படுத்தினேன். அந்த நிலைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply