அல்கைதா அரபு பிராந்திய தலைவராக காசிம் அல்ரைமி நியமனம்

யெமனில் அமெரிக்க படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் அல்கைதா இயக்கத்தின் பிரதி தலைவரான நசீர் அல் வஹிஷி சுட்டுக் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அல்கைதா அரபு பிராந்திய தலைவராக காசிம் அல் ரைமி நியமிக்கப்பட்டுள்ளார். அல்கைதாவின் யெமன் பிராந்திய இராணுவத் தளபதியாக கடமையாற்றிய இவர் அதே யெமன் நாட்டைச் சேர்ந்தவர். இன்றைய திகதிக்கு 41 வயதாகும் இவரையும் அமெரிக்கா குறி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் நசீர் அல் வஹிஷி கடந்த வாரமே கொல்லப்பட்டதாகவும், நேற்று செவ்வாய்க்கிழமையே அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூட சில செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply