காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். 45-வது பிறந்தநாளை கொண்டாடும் ராகுல் காந்திக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “காங்கிரஸ் துணைத் தலைவர் ஸ்ரீ ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் மிகவும் ஆரோக்கியமாகவும், நீண்ட நாட்கள் வாழவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்,” என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மீண்டும் நீண்ட வருடங்களுக்கு பின்னர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply