2020-ம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் இருந்து 2500 இந்திய நர்சுகள் வெளியேற்றப்படும் அபாயம்
இங்கிலாந்து மருத்துவமனைகளில் இந்தியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமான நர்சுகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அரசு அந்நாட்டில் நர்சுகள் தங்கி பணியாற்றுவதற்கு புதிய குடியுரிமை கொள்கை ஒன்றை கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி ஆண்டுக்கு குறைந்தபட்சம் 35 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 லட்சம்) சம்பளம் பெறும் நர்சுகள் மட்டுமே அடுத்த 6 ஆண்டுகளுக்கு பிறகும் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியும்.
இந்த சம்பளம் பெற முடியாத வெளிநாட்டு நர்சுகளில் முதல் கட்டமாக 2017-ல் 3,400 பேரும், இரண்டாம் கட்டமாக 2020-ல் 3,600 பேரும் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
தற்போது மூத்த இந்திய நர்சுகள் சிலரைத் தவிர, மற்றவர்கள் ஆண்டுக்கு 21 லட்ச ரூபாய் வரை தான் சம்பளம் பெற்று வருகின்றனர். இவர்களால் அடுத்த 2 மற்றும் 6 ஆண்டுகளுக்குள் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆண்டு வருமானத் தொகையான ரூ.35 லட்சத்தை எட்டுவது கடினம். இதன் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனைகளில் பணிபுரிய சென்ற இளம் இந்திய நர்சுகளில் 2,500 பேர் வரை நாடு திரும்பும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply