ரேடாரில் கோளாறு: நியூசிலாந்து நாட்டில் விமான சேவைகள் பாதிப்பு
தெற்கு பசிபிக் நாடுகளுக்கான வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு முறையில் கோளாறு ஏற்பட்டதால் நியூசிலாந்து நாட்டில் விமான சேவைகள் முற்றிலுமாக முடங்கியது. அந்நாட்டு நேரப்படி மதியம் 2.48 மணியளவில் வான் போக்குவரத்தை கண்காணிக்கும் ரேடார் செயலிழந்ததாக கூறிய ஏர்வேஸ் நியூசிலாந்து செய்தி தொடர்பாளர், இக்கோளாறு எப்போது சரியாகும் என தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவை முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி அனைத்து விமானங்களும் பல்வேறு விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வானில் பறந்து கொண்டிருந்த விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனால் விமானங்களில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் அனைவரும் குறித்த நேரத்திற்கு செல்லவேண்டிய இடங்களுக்கு போகமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply