இந்தியப் பெருங்கடலில் 600 கிலோ ஹெராயின் பிடிபட்டது

இந்தியப் பெருங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய போர்க் கப்பல் ஒன்று 600 கிலோகிராம் ஹெராயினைக் கைப்பற்றியுள்ளது. அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் அரை பில்லியன் டாலர்களுக்கும் அதிகமானதாகும். முப்பது நாடுகளைச் சேர்ந்த கூட்டு கடற்சார் பாதுகாப்பு படையினர் இந்த அளவுக்கு ஹெராயினை கைப்பற்றியுள்ளது இதுவே இரண்டாவது முறையென்று ஆஸ்திரேலியக் கடற்படையினர் கூறுகின்றனர்.

அந்தக் கூட்டு கடற்சார் பாதுகாப்பு படையினர் மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடலில் கடற்கொள்ளையை தடுப்பதிலேயே பிரதானமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

கிழக்கு ஆப்ரிக்க கடற்பரப்புக்கு அப்பல் நடுக்கடலில் இந்த மறிப்புச் தோனனையில் தமது கடற்படையின் கப்பல் ஈடுபட்டது எனவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply