நேபாள நிலநடுக்கத்தால் நிலை குலைந்து நின்றவர்களிடம் அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்த இந்தியர்கள்

நேபாளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அடுத்தடுத்து நிகழந்த இரு நில நடுக்கங்களுக்கு சுமார் 9 ஆயிரம் பேர் பலியாகினர். பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடு, வாசல், தொழில், பொருளாதார நிலை அனைத்தையும் இழந்து அன்னக்காவடிகளாக அல்லல் படுகின்றனர். எரியும் வீட்டில் பறித்த வரை மிச்சம் என்பதைப் போல் நிலைகுலைந்து நிற்கதியாக நிற்கும் இந்த மக்களை ஏமாற்றி பணம் பறித்த மூன்று இந்தியர்களை அந்நாட்டு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தின் சம்பிரான் பகுதியை சேர்ந்த சுஜித் குமார், சுதிப் குமார், ரஞ்சித் குமார் ஆகிய அந்த மூவரும் இந்திய அரசின் உயரதிகாரிகள் போல் நடித்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை கருணை தொகை வாங்கித் தருவதாக நாடகமாடி உள்ளனர்.

இதற்கென தனியாக விண்ணப்பப் படிவங்களை தயாரித்து கொண்டு சென்ற இந்த மூவரும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் 100 முதல் 300 ரூபாய்க்கு பேரம் பேசி விற்பனை செய்து ஏராளமான பணத்தை மோசடி செய்துள்ளனர். இதுபற்றிய புகார்கள் வந்ததையடுத்து, ஃபதுவா ஹர்சவா பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்த இந்த மோசடி பேர்வழிகளை நேபாள போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply