அமைச்சின் செயலாளர்கள் ஆணையாளர் சந்திப்பு 62 தேர்தல் விதி மீறல்கள் இது வரை பதிவு
தேர்தல் ஆணையா ளருக்கும் அமைச்சின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் தொடர்பில் அரச நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள பிரசார கட்அவுட்கள் தொடர்பாகவும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் இதன் போது ஆராயப்பட இருப்பதாக தேர்தல் திணைக்கள உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
தேர்தல் தொடர்பான கட்அவுட்கள் அரச நிறுவனங்களில் தொங்கவிடப்பட்டுள்ளதாக பெப்ரல் நிறுவனம், தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டிருந்தது. சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட ஒழுங்குகளை தயாரித்து முன்னெடுப்பது குறித்தும் அமைச்சின் செயலாளர்களுடனான சந்திப்பில் ஆராயப்படவுள்ளதாக அறிய வருகிறது.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் நாடு முழுவதிலும் 62 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.
இதில் மூன்று வன்முறைச் சம்பவங்களும் ஏனையவை தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவங்களும் உள்ளடங்குவதாக கபே சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி பொதுச் சொத்துக்கள் தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக 41 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட் டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனைவிட சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் 18 முறைப் பாடுகளும், ஒரு கொலைச் சம்பவமும் பதிவாகியுள்ளது. சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 2 முறைப்பாட்டு சம்பவங்க ளும் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply