பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட்டின் கவுன்ட் டவுன் இன்று தொடக்கம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி ராக்கெட் – சி 28 மூலம் நாளை மறுநாள் 5 வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது. இதற்கான 62 அரை மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 7 மணி 28 நிமிடங்களுக்கு தொடங்குகிறது. இங்கிலாந்தை சேர்ந்த சர்ரே செயற்கைகோள் தொழில்நுட்ப நிறுவனம் டிஎம்சி 3௧, டிஎம்சி 3௨, டிஎம்சி 3௩ ஆகிய 3 செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது. தலா 447 கிலோ எடையும் 3 மீட்டர் நீளமும் கொண்ட இந்த 3 செயற்கை கோள்களை, நாளை மறுநாள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி28 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் சர்ரே செயற்கைகோள் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ள சி.பி.என்.டி 1 என்ற துணை செயற்கைகோளும், டி-ஆர்பிட் செயில் என்ற நானோ செயற்கைகோளும் பி.எஸ்.எல்.வி சி28 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
முதல் மூன்று செயற்கைகோள்கள் புவி வட்ட பாதையில் இருந்து 120 டிகிரியில் தனித்தனியாக வலம் வந்து புகைப்படம் எடுத்து அனுப்பும் பணியை மேற்கொள்ளும். புவியின் இயற்கை வளங்களை ஆய்வு செய்வது, நகர்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, அவற்றை கண்காணிப்பது ஆகிய பணிகளிலும் இந்த செயற்கை கோள்கள் ஈடுபடுத்தப்படும்.
இவை புவி வளம், மண்வளம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான 62 அரை மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 7 மணி 28 நிமிடங்களுக்கு தொடங்குகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply