மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்
கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று அதிகாலை காலமானார். 87 வயதான விஸ்வநாதன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700க்கு மேற்பட்ட படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் மேல் இசை அமைத்துள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் பாடகர், நடிகர் என சினிமாவில் பல அவதாரங்களும் எடுத்துள்ளார் எம்.எஸ்.வி., மறைந்த எம்.எஸ்.வி.யின் உடல் நாளை காலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு சினிமா பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply