தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க இன்றே இறுதி தினம்

இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதனால் இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்கள் இன்றையதினம் அருகிலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இன்றைய தினத்திற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் மேலும் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply