அமெரிக்காவில் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவில் 19 வயதான அமந்தா மார்ட்டன் என்ற பெண்ணை கடத்தி, கற்பழித்து, கொலை செய்த வழக்கில் டேவிட் ஜிங்க் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2001-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது. மிசவுரி மாகாண சிறையில் அவருக்கு விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றினர்.
தண்டனை நிறைவேற்றப்படுவதை காண கொலை செய்யப்பட்ட அமந்தாவின் பெற்றோர், சகோதரி, உறவினர்கள் சிறைக்கு சென்றிருந்தனர். ஆனால் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து அவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply