3 கடல் மைல் தூரம் வடக்குக்கு வேண்டும் கோருகிறார் அமைச்சர் டெனீஸ்வன்
வடமாகாணத்துக்கு என கடற்கரையிலிருந்து 3 கடல் மைல் தூரத்துக்கும் மேற்பட்ட கடல் எல்லையை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரவுள்ளதாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொதுவாக நாடுகளுக்கு கடற்கரையிலிருந்து 3கடல் மைல் தூரம் என ஒதுக்கப்பட்டுள்ளது.அதாவது மீன்பிடிக்கு அது உபயோகிக்கப்படுகின்றது.வடக்கில் 3கடல் மைல் தொலைவுக்கும் மேற்பட்ட கடல் எல்லையை வழங்குமாறு கோரவுள்ளேன்.
அதன்மூலமாக சட்டம் இயற்றி வரி விதிக்க முடிவதோடு கடல் வளத்தையும் பாதுகாக்க முடியும்.
மீன்பிடியில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.ஒவ்வொரு நாடுகளும் தமக்கு ஏற்ற வகையி;ல் வேண்டிய விடயங்களை மேற்கொள்கின்றன.வடமாகாண சபைக்கு இந்த எல்லை கிடைக்கும் பட்சத்தில் வடக்கு மீன்பிடித் துறையைப் பாதுகாக்க வளர்க்க சிறந்த நடவடிக்கை எடுக்க முடியும்.அதன் மூலமாகக் கடல் வளத்தையும் திட்டமிட்டுப் பாதுகாக்கலாம். என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply