புலிகளை எதிர்க்கவில்லை! அவர்களின் கொள்கைகளையே எதிர்த்தேன் : ஆனந்தசங்கரி

தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்க்கவில்லை எனவும் அவாகளின் கொள்கைகளையே தாம் எதிர்த்ததாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கவில்லை.எனினும், எமது கட்சியில் சில முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்களின் எதிரியாக இயங்கி வருகின்றது. ரணில் விக்ரமசிங்கவிற்கும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் ஒன்றிணைந்து அரசியல் செய்ய முடிந்த போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியவில்லை.

இது தமிழ் மக்களின் துரதிஸ்டமாகவே கருதப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைவருடனும் ஒன்றிணைந்து செயற்படுவதாக பொதுமக்களிடம் காண்பித்த போதிலும், கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

இதனை மூடி மறைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply