ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படை வீரருக்கு தேர்தலில் போட்டியிட தடை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1987ம் ஆண்டு இலங்கை வந்த போது, அவரை துப்பாக்கியால் தாக்கிய முன்னாள் கடற்படை வீரருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு ராஜீவ் காந்தி நம் நாட்டிற்கு விஜயம் செய்த போது, அந்நாட்டின் கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டிருக்கையில் அந்த அணிவகுப்பில் பங்கேற்ற விஜிதா ரோஹன டி சில்வா என்ற வீரர், ராஜீவின் தோள்பட்டையில் துப்பாக்கியைக் கொண்டு தாக்கினார். அதற்காக இரண்டரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட விஜித ரோஹன டி சில்வா, அதன் பின் விடுதலையானார் .
இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் “பொது ஜன பெரமுனா’ கட்சி சார்பில் போட்டியிட விஜிதா வாய்ப்பு கேட்டிருந்தார்.எனினும் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட அவர் இல்லாதததால், விஜிதவுக்கு போட்டியிட வாய்ப்பு முடியாது என்று அக்கட்சியின் தலைவர் திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply