ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த போஸ்னியா கிராமத்தில் நிலம் வாங்கிய ஐ.எஸ்.தீவிரவாதிகள்

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களை ஒடுக்க ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.இதனால் ஆத்திரம் அடைந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக அங்கு நுழைய ஐரோப்பிய நாடான போஸ்னியாவில் மிகவும் உள்ளடங்கிய கிராமங்களில் நிலம் வாங்கியுள்ளனர்.அங்கு ரகசிய பயிற்சி முகாம்களை அமைத்துள்ளனர்.

அதில் சிரியா, ஈராக் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.அப்பகுதிகளுக்கு செல்ல போதிய ரோடு வசதி இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே யாராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பகுதிகளை விலைக்கு வாங்கி முகாம்கள் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.பயிற்சி முடிந்தவுடன் போஸ்னியாவில் தாக்குதலை தொடங்கி ஐரோப்பிய நாடுகளை கதிகலங்க வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply