அமெரிக்காவில் இந்து கோவில் பெயர் பலகையில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் கோவில் கட்ட அங்கு வாழும் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக கிளாமென்ஸ் என்ற இடத்தில் 7.6 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். அங்கு 3,600 சதுர அடியில் கோவில் கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன.அதற்கான அறிவிப்புடன் கூடிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெயர் பலகையின் மீது யாரோ சில சமூகவிரோதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அதில் 60–க்கும் மேற்பட்ட துளைகள் உள்ளன. இச்சம்பவம் கடந்த 4–ந்தேதி நடந்துள்ளது.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இந்து கோவிலில் இந்தியர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply