ஈராக்கில் ஜூலை மாதத்தில் நடைபெற்ற சண்டையில் 1,332 பேர் பலி: ஐ.நா. தகவல்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே ஜூலை மாதத்தில் நடைபெற்ற சண்டையில் 1,332 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ். அமைப்புக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பொதுமக்கள் 844 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சண்டையில் ராணுவ வீரர்கள் 488 பேர் உயிரிழந்துள்ளனர். 2.108 பேர் காயமடைந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இச்சண்டையில் பாக்தாத் நகர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜ.நா. சபை, அந்நகரில் மட்டும் 335 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 1466 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply