கொலம்பியாவில் விமானப்படை விமான விபத்தில் 11 வீரர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள சீசர் மாகாணத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) விமானப்படை விமானம் ஒன்று, பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமானி மற்றும் 10 வீரர்கள் பயணம் செய்தனர். தலைநகர் பகோட்டாவில் இருந்து 600 கி.மீ. தொலைவில், வெனிசுலா நாட்டின் எல்லையில், கோடாஸி என்ற நகருக்கு அருகே அந்த விமானம் பறந்தபோது, திடீரென விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜூவான் மனுவேல் சாண்டோஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் பலியான வீரர்களை ‘நாயகர்கள்’ என வர்ணித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply