அமெரிக்காவில் காட்டுத்தீ: 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், 20 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயை கட்டுப்படுத்துவதற்குதீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார் கள். சான்பிரான்சிஸ்கோவில் 90 சதுர மைல் பரப்பில் தீ பரவி உள்ளது. காற்றும் கடுமையாக வீசி வருகிறது. 9 ஆயிரம் வீரர்கள் நேற்று முன்தினம் முதல், தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 24 வீடுகள் தீக்கிரையாகின. விக்கி எஸ்ட்ரெல்லா என்பவர் பரவி வரும் காட்டுத்தீ பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்நாளில் இப்படி ஒரு தீயை பார்த்தது கிடையாது. 300 அடி உயரத்துக்கு புகை மண்டலம் உருவாகி உள்ளது” என்றார்.
இந்த தீ விபத்தின் காரணமாக 13 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுமாறு கலிபோர்னியா மாகாண நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply