சமஷ்டி கோரிக்கை ஒரு கற்பனை: நாட்டை துண்டாட அனுமதியோம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சமஷ்டி கோரிக்கைக்கு எவ்வகையிலும் இடமளிக்கப்போவதில்லை என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி செயலாளர் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பிரதமரும் ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் த. தே. கூ. இன் 10 அல்லது 15 பாராளுமன்ற ஆசனங்களை வைத்து சமஷ்டி முறையை ஏற்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.
கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் நேற்று கருத்துத்தெரிவித்த அவர், நாட்டை துண்டாடும் யோசனை மஹிந்த ஆட்சியிலே கொண்டு வரப்பட்டது. நாட்டை துண்டாடும் அரசியல் யோசனையை ஜி. எல். பீரிஸ் கொண்டு வந்தார். நாம் அதனை அன்று தோற்கடித்ததால் நாட்டிற்கு மீண்டும் அத்தகைய பாதிப்பு ஏற்படாதுபோனது.
ஐக்கிய இலங்கை கோட்பாட்டை பிரதமர் ஜனாதிபதி ஆகியோர் மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொண்டுள்ளார். 1949 முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி கோரி வருகிறது. இது வெறும் கற்பனை மாளிகையே- சமஷ்டி முறையை கொண்டுவர சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை அனுமதி பெற வேண்டும்.
த. தே. கூ. இன் 10 அல்லது 15 ஆசனங் களை வைத்துக்கொண்டு இதனை செய்ய முடியாது. நாம் இருக்கும் வரை நாட்டை துண்டாட இடமளிக்க மாட் டோம். நாட்டின் ஆள்புள ஒருமைப்பாட்டை பாதுகாப்போம்.
அரசியல் மறுசீரமைப்பே எமது அடுத்த திட்டமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply