மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில், 2 ரயில்கள் தடம் புரண்டு பயங்கர விபத்து
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் மஜாக் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இரண்டு விரைவு ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில், காமாயானி விரைவு ரயில் மும்பையிலிருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தது. ஹர்தாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, மஜாக் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, காமாயானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதேபோல் அவ்வழியாக வந்து கொண்டிருந்த ஜமல்பூரிலிருந்து, மும்பை செல்லும் ஜனதா விரைவு ரயிலும் தடம் புரண்டது. ரயில் பெட்டிகளில் இருந்து வெளியேற முயன்ற இரண்டு பயணிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
வெள்ளத்தில் ஏராளமானோர் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மற்றும் மத்திய பிரதேச மாநில மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் விரைவாக மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கேட்டுக் கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply