இந்தோனேஷிய விமான விபத்து: 53 சடலங்கள் மீட்பு

இந்தோனேஷிய விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 53 பேரது சடலங்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் பப்புவா மாகாண தலைநகர் ஜெயபுராவில் இருந்து ஓக்சிபில் நகருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 54 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் பின்டாங் மலையில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி அனைவரும் பலியாகியிருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் சடலங்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்தோனேசிய மீட்புக் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், 53 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இத்தகவலை அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜூலியல் அதிராவிட பராத்தா ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரே ஒரு குழந்தையின் சடலத்தை மட்டும் இன்னும் மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply