இலங்கை தேர்தல் முடிவுகள்: ரணில் கூட்டணி 93 இடங்கள், ராஜபக்சே கூட்டணி 83 இடங்கள் பிடித்தன
இலங்கை பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தேர்தல் முடிவடைந்ததும் உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 5.15 மணியளவில் முடிவடைந்தது. அதன்பின் க
ட்சிகள் பிடித்த தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 196 தொகுதிகளில் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி 93 இடங்களையும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி கூட்டணி 83 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களையும், ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியமைப்பதற்கு 113 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கே கட்சியின் கூட்டணிக்கு 93 இடங்களே உள்ளன. இருப்பினும், சிறிசேனாவின் ஆதரவால் இன்று மாலை அவர் பிரதமராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. அதன்பின்னர், வாக்குகள் அடிப்படையிலான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அமைச்சர்கள் நியமனம் தொடர்பான நடவடிக்கை தொடங்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply