இலங்கையில் ரனில்விக்ரமசிங்கே அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

இலங்கையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 93 இடங்கள் கிடைத்துள்ளது. தேர்தலில் பெற்ற வாக்கு சதவீத அடிப்படையில் இக்கட்சிக்கு கூடுதலாக 11 இடங்கள் கிடைத்துள்ளது. இருந்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. அதே நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 14 இடங்களில் வென்றுள்ளது. ஒட்டு விகித அடிப்படையில் 2 இடங்கள் கிடைத்துள்ளது.

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ரனில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளார். அதே வேளையில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு அளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பும் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் வெற்றி குறித்து ரனில் விக்ரமசிங்கே கூறும் போது, புதிய சகாப்தத்தின் சவால்களை எதிர் கொண்டு நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைப்போம். அனைவரும் எங்களுடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply