குண்டுத் தாக்குதல் நடந்த பாங்காக் வழிபாட்டிடம் திறக்கப்பட்டது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் திங்களன்று நடந்த குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த வழிபாட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட குறித்த வழிபாட்டிடத்தில் ஊதுவத்திகளை ஏற்றி, பூக்களையும் வைத்து மக்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர். சேதமடைந்த தரைப் பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பையொன்றுடன் காணப்பட்ட நபர் ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

அந்த நபரை அங்கிருந்து ஏற்றிச்சென்றிருந்ததாக நம்பப்படும் வாடகைக்கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர், அதன் பின்னர் விமானநிலையத்துக்கு இன்னொரு வாடகைக் காரில் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply