வடகிழக்கு சிரியாவில் தற்கொலை குண்டு தாக்குதல்: 16 பேர் பலி

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் குர்துப் படையினர் மீது புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இந்த தாக்குதல் பற்றி கூறும் போது சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள காமிஷ்லி நகரில் வெடிபொருள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தீவிரவாதி, குர்துப் படையினரின் பாதுப்பு படையினர் மீது மோதி வெடிக்கச் செய்தான். இதில் குர்துப் படையினரும், பொதுமக்களில் சேர்த்து 16 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply