அரசியலை விட்டு விலகமாட்டேன் – ஜனநாயகத்தை காக்க தொடர்ந்து பாடுப்படுவேன்: மகிந்த ராஜபக்ஷ

இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அவர் புதிய அதிபராக இன்று பதவியேற்க உள்ளார். ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற 7 இடங்கள் தேவைப்பட்ட போதிலும் இந்த எண்ணிக்கையை கொண்டு ஆட்சி அமைக்க முடியும். இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ள முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். மிக கடினமான சூழ்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு வாக்குகளித்த அனைவருக்கும் நன்றி.

மக்களுடைய தேவையை கருத்தில் கொண்டு தொடர்ந்து அரசியலில் ஈடுப்பட்டு, நாட்டின் ஜனநாயக அமைப்பு பாதுகாக்க பாராளுமன்றத்தில் செயல்பட முடிவு செய்துள்ளேன் என்று மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply