82-வயது தொல்லியல் ஆய்வாளரின் தலையை வெட்டி உடலை புரதான தூணில் இடத்தில் தொங்கவிட்டது ஐ.எஸ்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் 82-வயது தொல்லியல் ஆய்வாளரை கொலை செய்து அவர் வாழ்நாள் முமுவதும் போற்றி பாதுகாத்த புரதான இடத்திலேயே தொங்கவிட்டுள்ளது. மத்திய கிழக்கின் மிகப்பெரும் சாதனை பல்மைரா. அந்தக்காலத்தில் இருந்த ரோமப்பேரரசின் மற்ற நகரங்களைப் போன்றதல்ல பல்மைரா. மத்திய கிழக்கின் வரலாற்றுப் பெருமைகளில் ஒன்று பல்மைரா காரணம் இந்த நகரம் கலை ரீதியிலும் கலாச்சார ரீதியாகவும் தனித்தன்மை கொண்டிருந்தது. பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்த பல்மைராவின் பிரம்மாண்டமான கோயில்கள், நெடுந்தூண்களைக் கொண்ட ராஜவீதிகள், திறந்தவெளி கலையரங்கம் போன்றவையெல்லாம் பல்மைரானியர்களின் கலை உணர்வுக்கும், கட்டிடக்கலை நிபுணத்துவத்துக்கும் சான்றுகளாக நிலைத்து நிற்கின்றன.

ஆனால் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளால் அழிவின் விளிம்பில் இருக்கிறது பல்மைரா. சிரியாவின் இந்த புரதான நகரின் தலைமை தொல்லியல் ஆய்வாளராக பணியாற்றி அரிய பொக்கிஷங்களை பாதுகாத்தவர் காலித் ஆசாத். கடந்த ஒரு மாதமாக ஆசாத்தை சிறைவைத்து அவரிடமிருந்து பல்மைராவில் இருப்பதாக கூறப்படும் புதையல் தொடர்பான தகவல்களை பெற முயற்சித்து வந்தது ஐ.எஸ்.

ஆனால் எந்த தகவல்களை கொடுக்க மறுத்துவிட்டதால் அவரது தலையை வெட்டி கொலை செய்து, பல்மைராவில் உள்ள ரோமானிய தூணில் தொங்கவிட்டுள்ளது. கடுமையாக சேதமடைந்திருந்த இந்த தூணை, ஆசாத் 50 ஆண்டுகள் கடுமையாக உழைத்து சீரமைத்தார் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply