2020வரை ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் எதுவும் நடத்தப்படமாட்டாது

ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ 2020ஆம் ஆண்டுவரை நடைபெறமாட்டாது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்றுத் தெரிவித்தார். நாட்டை முன்னெடுத்துச் செல்லும் ஐக்கிய தேசிய முன்னணியின் தெளிவான வேலைத்திட்டத்தை சரியான முறையில் புரிந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்குமென்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது தனது கட்சியை மட்டும் சிந்தனையில் கொண்டு செயற்படாமல் நாட்டைப் பற்றி சிந்தித்து ஒரு பொதுவான இலக்குக்காக செயற்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட குழுவினருக்கு நன்றி தெரிவித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பொறுப்பேற்காமல் இருப்பது அவரது தனிப்பட்ட விடயம் எனத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்காக ஏதேனும் ஒரு கடமையை நிறைவேற்றுவாராயின் அதை தான் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை வளம்மிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் அனைவரும் ஒன்றுசேர்ந்து செயற்பட முன்வரவேண்டும் என அனைத்துக் கட்சிகளிடம் கேட்டுக் கொண்ட அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் மறுசீரமைப்பு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்ப தாகவும் கூறினார்.

ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுக்கக் கிடைத்திருக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்துவதற்குப் பின்நிற்கப் போவதில்லை என்றும் தெரி வித்தார். பத்தரமுல்லையிலுள்ள நல்லாட் சிக்கான தேசிய முன்னணியின் அலுவலக த்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நடந்து முடிந்த தேர்தலில் எமது முன்னணியிலிருந்து கல்விமான்கள் இருவர் வெற்றிபெற்றுள்ளனர். கடந்த ஜனவரி 8ஆம் திகதி பெற்ற வெற்றியுடன் நல்லாட்சியை முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கமாகும். இனங்களுக்கிடையே ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்த குழுவினர் இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப் பட்டார்கள். வடக்கிலும் இவ்வாறானவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். தமக்கு 58 இலட்சம் வாக்குகள் இருப்பதாக ராஜபக்ஷ குழுவினர் ஒரு மயையை உருவாக்கினர். இதன்மூலம் தமக்கு பிரதமராக முடியும் என்றும் அவர் நம்பியிருந்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபடும், புலிகள் மீண்டெழுவார்கள் அரச வளங்கள் தனியார் மயப்படுத்தப்படும் எனப் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்ட ராஜபக்ஷ குழுவினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கிருந்த 58 இலட்சம் வாக்குகளும் இந்தத் தேர்தலில் குறைந்துபோனது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குகள் எதுவும் குறைந்துவிடவில்லை. அனைவரும் ஒரு தேசிய அரசாங்கத்துக்காகச் செல்ல வேண்டும். இந்த நாட்டில் இலஞ்ச ஊழல்களை ஒழிப்பதற்கு ஐவகை வேலைத்திட்டங்களை நாங்கள் முன்வைத் திருக்கின்றோம்.

நீதியாகவும் நேர்மையாகவும் பிழை யின்றியும் இந்தத் தேர்தலை நடத்தியதை யிட்டு தேர்தல் ஆணையாளருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. தேர்தலொன்றின் போது பாதாள உலகக் கோஷ்டியினரின் அச் சுறுத்தல், பரிசுப் பொருட்கள் வழங்குதல், சுவரொட்டிகள் என்பவற்றை இல்லா தொழிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலை சரியான முறையில் நடத்துவதற்காக அந்த நிறுவனங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு பலப்படுத்தப்பட வேண்டும். புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அரச தரப்பு எதிர்த்தரப்பு என்று பிரிந்து நிற்காமல் நாட்டுக்காக முன்வந்து செயற்பட வேண்டும் என நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை. சர்வதேசம் எமது நாட்டை சுற்றிவளைப்பதற்கும் அனுமதிக்கப் போவதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் குடும்ப ஆட்சியிலிருந்து விடுபடும் என நான் நினைக்கின்றேன்.

எதிர்வரும் ஐந்தாண்டு காலத்தில் எம்முன் இருக்கும் சவால்களுக்கு முகங்கொடுக்க ஆயத்தமாக இருக்கிறோம். அவற்றை வெற்றிகாணவும் வேண்டும். ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நிறுவனங்களுக்கு மேலும் பலம் சேர்க்க வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply