கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள போனஸ் ஆசனங்களை பகிர்ந்து கொள்வதினில் மோதல்
கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள போனஸ் ஆசனங்களை பகிர்ந்து கொள்வதினில் மோதல் உச்ச நிலையினை அடைந்துள்ளது. தேசியப்பட்டியலில் பேராசிரியர் சிற்றம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அருந்தவபாலன், சாந்தினி ஆகியோர் தமக்கே தேசியப்பட்டியலில் இடம் ஒதுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந் நிலையில் அருந்தவபாலனின் ஆதரவாளர்கள் கொதித்து போயுள்ள நிலையில் கட்சியின் தலைமைப்பீடம் அருந்தவபாலனுக்கு தேசியப்பட்டியல் மூலம் வாய்ப்பை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று நுாற்றுக்கணக்கான அருந்தவபாலனின் ஆதரவாளர்கள் சேனாதிராசாவிடம் சென்று முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காராணமாக கட்சியின் உயர்பீடம் கூடி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply