அதிக நேரம் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்படவாய்ப்பு: ஆய்வில் தகவல்
அதிக நேரம் வேலை செய்வதால் குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் நேரம் செலவிட முடியாது என்பதை விட, வாரத்துக்கு 50 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை பார்ப்பவர்களுக்கு பக்கவாதம், இருதயக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், அதிக நேரம் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 6.03 லட்சம் பேரிடம், தொடர்ந்து 8.5 ஆண்டுகள் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில் வாரம் 35௪0 மணி நேரம் வேலை செய்தவர்களை விட, வாரம் 55 மணி நேரத்துக்கு மேலாக வேலை பார்த்தவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் வருவது 13 சதவீதம் அதிகரித்திருந்தது. மேலும் 5.28 லட்சம் பேரிடம் 7 ஆண்டுகள் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 55 மணி நேரம் வேலை பார்த்தவர்களுக்கு பக்கவாதம் தொடர்பான பிரச்னைகள் வருவது 1.3 மடங்கு அதிகரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply