கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் ராஜினாமா

கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஏதுவாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அந்நாட்டுக்கு நிதி உதவி அளித்து வந்த ஐரோப்பிய கூட்டமைப்பு, சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தன. பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கீரிஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் அதற்கு ஒத்துக்கொண்டார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கடன் ஒப்பந்தத்திற்கு சிப்ராஸ் சார்ந்திருந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு நிலவியது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சிப்ராஸ் ”கடன் அளித்த சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மிகக் கடினமான மற்றும் முக்கிய காலகட்டம் கடந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் குறித்து நாட்டு மக்கள் என்ன கருதுகிறது என்பதைச் சொல்ல அனுமதிக்க வேண்டிய எனது கடமை. எனவே ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க போகிறேன்” என அறிவித்துள்ளார்.

தேர்தல் தேதி பற்றி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply