குண்டு வைத்தவனை கண்டுபிடிக்க முடியாமல் தாய்லாந்து போலீசார் திணறல்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்து கோவிலில் கடந்த 17-ந்தேதி சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 7 பேர் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். 90-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய சதிகாரன் கோவிலில் இருந்து வெளியேறுவதும். அவன் வாடகை மோட்டார் சைக்கிளில் சவாரி செய்து செல்லும் காட்சியும், அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால், குண்டு வைத்தவனை எளிதில் பிடித்து விடலாம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். எனினும், குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆனபிறகும் கூட அந்த சதிகாரனை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.
இது குறித்து தேசிய தலைமை போலீஸ் அதிகாரி சோம்யூத் பம்பான்முயாங் கூறுகையில், “குண்டு வைத்தவனை கண்டுபிடிப்பதற்கு போதுமான நவீன சாதனங்கள் எங்களிடம் இல்லை. இதனால் சதிகாரனை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. இதற்காக வெளிநாட்டில் இருந்து நவீன சாதனங்களை கேட்டு இருக்கிறோம். அதுவரை நாங்கள் காத்திருக்கவேண்டி உள்ளது’’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply